உங்கள் ஸ்மார்ட் பண்ணைக்கான சிறிய IoT சாதனத்தை எப்படி உருவாக்குவது? (குறைந்த செலவில்)
முந்தைய பதிவில் “இந்தியாவில் ஒவ்வொரு ஸ்மார்ட் பண்ணைக்கும் தேவையான 5 குறைந்த செலவு சென்சார்கள்” பற்றி பார்த்தோம். அந்த சென்சார்கள் மட்டும் இருந்தால் போதாது — அவற்றிலிருந்து வரும் தகவல்களை சேகரித்து மொபைல் அல்லது இணையத்தின் மூலம் பார்க்க ஒரு சிறிய IoT (Internet of Things) சாதனம் தேவைப்படும். இந்த பதிவில் மிகவும் குறைந்த செலவில் விவசாயிகள் தாங்களே எப்படி ஒரு சிறிய ஸ்மார்ட் பண்ணை கண்காணிப்பு சாதனத்தை உருவாக்கலாம், அதன் விலை எவ்வளவு, முன்பே தயாரிக்கப்பட்ட சாதனங்கள் எவ்வளவு செலவாகும் என்பதையும் பார்க்கலாம்.
இந்த IoT சாதனம் என்ன செய்யும்?
இந்த சிறிய சாதனம் உங்கள் நிலத்தில் இருக்கும் பல சென்சார்களுடன் இணைந்து தொடர்ந்து தரவுகளை சேகரிக்கும். மண்ணில் ஈரப்பதம் குறைந்தால் எச்சரிக்கை கொடுக்கலாம், வெப்பநிலை அதிகமானால் உடனே தெரிந்துகொள்ளலாம், தண்ணீர் தொட்டி காலியாகிறதா என்று கண்காணிக்கலாம். இப்படி எல்லா தகவல்களையும் ஒரே இடத்தில் பார்த்து விவசாய முடிவுகளை எளிதாக எடுக்க உதவும். பெரிய பண்ணைகளுக்கு மட்டும் அல்லாமல் சிறிய நிலம், தோட்டம், வீட்டுத் தோட்டம் ஆகியவற்றுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
1. ESP32 கட்டுப்பாட்டு பலகை (Main Controller) – ₹350 முதல் ₹600
2. மண் ஈரப்பதம் சென்சார் – ₹120 முதல் ₹250
4. தண்ணீர் அளவு சென்சார் – ₹150 முதல் ₹300
5. ஒளி சென்சார் – ₹50 முதல் ₹120
3. வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் சென்சார் – ₹180 முதல் ₹350
படி 1 – சாதனத்தை ஒன்றிணைத்தல்
முதலில் ESP32 போர்டை PCB அல்லது Breadboard மீது பொருத்துங்கள். அதன் பிறகு ஒவ்வொரு சென்சாருக்கும் மின்சார இணைப்பை சரியாக கொடுக்க வேண்டும். வயர்கள் தளராமல் பாதுகாப்பாக இணைக்கப்பட வேண்டும். இறுதியாக முழு அமைப்பையும் நீர்ப்புகா பெட்டிக்குள் பொருத்துவது நல்லது.
படி 2 – சென்சார் இணைப்பு
மண் ஈரப்பதம் சென்சாரை ESP32-இன் Analog Pin உடன் இணைக்கவும். வெப்பநிலை சென்சாரை Digital Pin உடன் இணைக்க வேண்டும். தண்ணீர் அளவு மற்றும் ஒளி சென்சார்களையும் சரியான Port-களில் இணைத்து எல்லா இணைப்புகளும் சரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்கவும். மின்சாரம் கொடுக்கும் முன் ஒருமுறை சரிபார்த்தால் பாதுகாப்பாக இருக்கும்.
படி 3 – மென்பொருள் பதிவேற்றம்
Arduino IDE போன்ற மென்பொருளை பயன்படுத்தி ESP32-க்கு நிரல் பதிவேற்றலாம். Wi-Fi விவரங்களை உள்ளிட்டு சாதனத்தை இயக்க வேண்டும். அதன் பிறகு Serial Monitor மூலம் தரவுகள் வருகிறதா என்பதை சரிபார்க்கலாம். வெற்றிகரமாக இணைக்கப்பட்ட பிறகு மொபைல் அல்லது இணையத்தில் தரவை பார்க்க முடியும்.
படி 4 -பண்ணையில் நிறுவுதல்
சென்சார்களை சரியான இடத்தில் பொருத்துவது முக்கியம். மண் ஈரப்பதம் சென்சாரை பயிரின் வேர் பகுதியில் வைக்க வேண்டும். வெப்பநிலை சென்சாரை நேரடி வெயிலில் வைக்காமல் பாதுகாக்க வேண்டும். கட்டுப்பாட்டு பெட்டியை மழை மற்றும் நீர் புகாத இடத்தில் பொருத்தினால் நீண்ட காலம் செயல்படும்.
மேலும் விரிவான விளக்கத்திற்கு இந்த பதிவைப் பார்க்கவும் : மண் ஈரப்பதம் (Soil Moisture) சென்சாரை ESP32 உடன் இணைப்பது எப்படி?
தயாராக கிடைக்கும் IoT சாதனங்கள் – எவ்வளவு விலை?
பலருக்கு வயரிங், புரோகிராமிங், சென்சார் இணைப்பு போன்றவை சிரமமாக இருக்கலாம். அதனால் முன்பே தயாரிக்கப்பட்ட சாதனங்கள் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
முன் தயாரிக்கப்பட்ட சாதன விலை (உதாரணம்):
- ஆரம்ப நிலை கண்காணிப்பு சாதனம் – ₹1,999
- பல சென்சார் இணைப்பு மாடல் – ₹2,999
- முழுமையான ஸ்மார்ட் பண்ணை அமைப்பு – ₹3,999+
இதில் பொதுவாக சென்சார்கள், மென்பொருள், கேஸ் மற்றும் இணைப்பு வசதிகள் இருக்கும்.
தயார் நிலையில் வாங்க வேண்டுமா?
நீங்களே அமைக்க நேரமில்லையா அல்லது நேரடியாக பயன்படுத்த தயாரான சாதனம் வேண்டுமா?
உங்கள் தீர்வு: Pudhuvayal IoT Devices
எளிய நிறுவல் • நேரடி கண்காணிப்பு • மொபைல் அறிவிப்புகள் •விவசாயிகளுக்காக வடிவமைக்கப்பட்டது.
மொத்த செலவு எவ்வளவு?
அனைத்து பகுதிகளையும் தனியாக வாங்கி அமைத்தால் பொதுவாக ₹1,500 முதல் ₹3,000 வரை செலவாகும். நீர்ப்புகா பெட்டி, வயர்கள், மின்சார இணைப்பு மற்றும் சிறிய PCB போன்றவை சேர்க்கும்போது செலவு சற்று அதிகரிக்கலாம். இருப்பினும் ஆரம்ப நிலை ஸ்மார்ட் விவசாயத்திற்கு இது மிகவும் குறைந்த முதலீடாகும்.
Comments
Post a Comment