மண் ஈரப்பதம் (Soil Moisture) சென்சாரை ESP32 உடன் இணைப்பது எப்படி?
குறிப்பு: விவசாய பயன்பாட்டிற்கு Capacitive Soil Moisture Sensor பயன்படுத்துவது நல்லது. சாதாரண இரும்பு Probe சென்சார்கள் சில மாதங்களில் துருப்பிடிக்கலாம்.
தேவையான பொருட்கள்
- ESP32 Development Board
- Capacitive Soil Moisture Sensor
- Jumper Wires
- USB Cable
- Arduino IDE
மொத்த செலவு சுமார் ₹500–₹900 வரை இருக்கும்.
Step 1 – வயரிங் (Wiring)
ESP32 மற்றும் Soil Moisture Sensor-ஐ கீழே உள்ளபடி இணைக்கவும்:
| Soil Sensor | ESP32 |
|---|---|
| VCC | 3.3V |
| GND | GND |
| AOUT | GPIO34 |
கவனம்:
சில Soil Sensors 5V ஆதரிக்கும். ஆனால் ESP32 Analog Pin பாதுகாப்பிற்காக 3.3V பயன்படுத்துவது நல்லது.
Step 2 – Arduino IDE அமைத்தல்
- Download Arduino IDE
- Arduino IDE திறக்கவும்
- Board → ESP32 Dev Module தேர்வு செய்யவும்
- USB மூலம் ESP32 இணைக்கவும்
- கீழே இருக்கும் நிரலை Paste செய்யவும்
Step 3 – Code Upload செய்யவும்
#define SOIL_SENSOR 34
void setup() {
Serial.begin(115200);
}
void loop() {
int value = analogRead(SOIL_SENSOR);
Serial.print("Soil Moisture Value: ");
Serial.println(value);
if(value > 3000){
Serial.println("மண் வறண்டு உள்ளது");
}
else if(value > 1800){
Serial.println("மண் ஈரப்பதம் சரியாக உள்ளது");
}
else{
Serial.println("மண் மிகவும் ஈரமாக உள்ளது");
}
delay(2000);
}
Step 4 – Output பார்க்க
Code Upload முடிந்ததும்:
- Tools → Serial Monitor
- Baud Rate → 115200
இப்போது சென்சாரை:
- உலர்ந்த / மண்ணில் வைக்கவும்
- ஈரமான மண்ணில் வைக்கவும்
அப்போது Serial Monitor-ல் மதிப்புகள் மாறும்.
பொதுவாக:
- 3000+ → Dry
- 1800–3000 → Normal
- 1800 கீழ் → Wet
இந்த மதிப்புகள் சென்சார் வகைக்கு ஏற்ப மாறலாம்.
இணைப்பை வீடியோவில் பார்க்க
இந்த வீடியோவை பார்த்து வயரிங் மற்றும் Upload செய்வதை எளிதாக பின்பற்றலாம்:
ESP32 Soil Moisture Sensor Tutorial (Video)
அல்லது
ESP32 + Capacitive Soil Moisture Full Setup
இதற்கு அடுத்த படியாக இதே தரவை Wi-Fi மூலம் மொபைலில் நேரடியாக காட்டும் IoT Dashboard உருவாக்கலாம்.
Comments
Post a Comment